ரூ.25 ஆயிரம் லஞ்சம்: தபால் அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,

ஜான்பூர்: உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் உள்ள கிளை தபால் மேலாளரிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக தபால் துணைப் பிரிவு ஆய்வாளர் (எஸ்.டி.ஐ.,) மற்றும் ஒரு டிரைவர் உட்பட இரண்டு குற்றவாளிகளை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.,) கைது செய்துள்ளது.

விசாரணை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தபால் துணைப் பிரிவு ஆய்வாளர் (எஸ்.டி.ஐ.,), மதியாஹு, சீயூரில் தபால் நிலைய ஆய்வு நடத்தி, பணப் பற்றாக்குறையைக் கண்டறிந்த பிறகு கிளை தபால் மேலாளரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் சி.பி.ஐ., நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

எஸ்.டி.ஐ., கடந்த மே.15 ல் ஆய்வு செய்தார். மேலும் புகார்தாரரை (கிளை தபால் மேலாளர்) பணப் பற்றாக்குறையைக் கண்டறிந்ததும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில், புகார்தாரர் கடந்த மே 17 அன்று தனது விளக்கத்தை சமர்ப்பித்தார்.
இருப்பினும், எஸ்.டி.ஐ., இந்த விஷயத்தை தீர்த்து வைப்பதற்கும், புகார்தாரர் இடைநீக்கம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பதிலாக புகார்தாரரிடமிருந்து ரூ.25,000 லஞ்சம் கேட்டார்.

இவ்வாறு லஞ்சம் வாங்கிய அதிகாரியும் அவரது டிரைவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement