வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ: இ.பி.எஸ்., நையாண்டி

சென்னை: ''நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இப்போது டில்லிக்கு போகிறார்; வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ,'' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லிக்கு பறக்கிறாராம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று 2ஜி-க்காக அப்பா டில்லி சென்றார். இன்று,டாஸ்மாக் தியாகி. தம்பி, வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா...எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! யார் அந்த தம்பி
இவ்வாறு இ.பி.எஸ்.அறிக்கையில் கூறியுள்ளார்.
முதல்வரின் உறவினரான ஆகாஷ் என்பவரை குறி வைத்து அமலாக்கத்துறை சில நாட்களாக ரெய்டு நடத்தி வருகிறது. ஆகாஷ், பல நுாறு கோடி ரூபாய் செலவில் சினிமா படங்களை தயாரித்து வருகிறார். மேலும் உதயநிதியின் நண்பரான ரத்தீஷ் என்பவர் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. இந்த ரத்தீஷ், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கே உத்தரவு போடும் அளவுக்கு அதிகாரத்துடன் செயல்பட்டுள்ளார்.
இவர்கள் மீது அமலாக்கத்துறை பிடி இறுகியுள்ள நிலையில், முதல்வர் டில்லிக்கு பயணிப்பதை கிண்டல் செய்து இ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (10)
Narayanan Muthu - chennai,இந்தியா
20 மே,2025 - 20:03 Report Abuse

0
0
சங்கி - ,இந்தியா
20 மே,2025 - 21:52Report Abuse

0
0
Reply
Pandianpillai Pandi - chennai,இந்தியா
20 மே,2025 - 19:38 Report Abuse

0
0
Reply
Haja Kuthubdeen - ,
20 மே,2025 - 19:37 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
20 மே,2025 - 19:08 Report Abuse
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20 மே,2025 - 19:07 Report Abuse

0
0
Reply
K.Ramakrishnan - chennai,இந்தியா
20 மே,2025 - 18:49 Report Abuse

0
0
Reply
Madhavan Kandasamy - ,இந்தியா
20 மே,2025 - 18:17 Report Abuse

0
0
Reply
S.Balakrishnan - ,
20 மே,2025 - 17:57 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
20 மே,2025 - 17:40 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுமித் நாகல் வெற்றி * பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில்
-
பாலியல் புகாரில் தி.மு.க., நிர்வாகி மீது கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்: சீமான் கேள்வி
-
மேற்கு வங்க கலவரம் நடந்தது எப்படி: விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்
-
ஜார்க்கண்டில் கன மழை: மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் 7 பேர் பலி
-
ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
திக்வேஷ் ரதிக்கு தடை
Advertisement
Advertisement