பாருல் சவுத்ரிக்கு டி.எஸ்.பி., பதவி

புதுடில்லி: இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 30. உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த இவர், 2023, ஹாங்சு (சீனா) ஆசிய விளையாட்டு 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். அடுத்து 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார்.
சமீபத்தில் தோகா டைமண்ட் லீக் போட்டியில் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை (9 நிமிடம், 13:39 வினாடி) படைத்தார்.
இவரை கவுரவிக்கும் வகையில் உ.பி., மாநில அரசு 'டி.எஸ்.பி.,' பதவி வழங்கியது. மொரதாபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் போலீஸ் அகாடமியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், பயிற்சிக்காக பெங்களூரு தேசிய அகாடமிக்கு பாருல் சவுத்ரி கிளம்பினார்.

Advertisement