அட்ரியான் கர்மாகர் 'வெள்ளி' * ஜூனியர் துப்பாக்கிசுடுதலில் அபாரம்

சஹ்ல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியா சார்பில் அட்ரியன் கர்மாகர் பங்கேற்றார். இவர் 2010 டில்லி காமன்வெல்த் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் ஜோய்தீப் கர்மாகரின் மகன்.
சிறப்பாக செயல்பட்ட அட்ரியன், மொத்தம் 626.7 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் ஜெஸ்பெர் (627.0) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ரோஹித் (620.2) 12, நிதின் வேதாந்த் (614.4) 35வது இடம் பெற்றனர்.
பெண்களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 623.5 புள்ளி மட்டும் பெற, 6வது இடம் தான் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை பிராச்சி (618.3) 24 வது இடம் பிடித்தார்.
இதுவரை ஒரு வெள்ளி மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

Advertisement