நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில் நெற்பயிரில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் மானாவாரி மற்றும் போர்வெல் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு உரம் விதைநெல் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து குண்டு ரகமான ஏ.எஸ்.டி. 16 ரக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நெல் பரிய தொடங்கும் நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி சுப்பையா கூறுகையில்: தற்போது கோடை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த பங்குனியில் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். விதை நெல் உரம் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
-
மதுரை பா.ஜ., நிர்வாகி சாவு: போலீசார் விசாரணை
-
போதையில் காரை ஓட்டி பைக்குகளை சேதப்படுத்திய சென்னை டிரைவர் கைது: ஓட்டுனர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!
-
தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் விபரீதம்; பாக்டீரியா பாதிப்பால் கேரளா இளைஞர் உயிருக்கு ஆபத்து