வீரசிவாஜி வித்யாலயா பொதுத்தேர்வில் சாதனை

திருப்பூர், ; திருப்பூர், அனுப்பர்பாளையம் தண்ணீர்பந்தல் காலனி கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் வீரசிவாஜி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, தொடர்ந்து 12 ஆண்டுகளாக பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

இப்பள்ளி மாணவி ஹர்ஷவர்த்தினி, 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம். இவர், கணினி பயன்பாடு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் இப்பள்ளி, 14 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. மாணவி சன்மதி, 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம். 486 மதிப்பெண்களுடன் அபிநித்யா இரண்டாமிடம்; 484 மதிப்பெண்களுடன் வர்ஷினி மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

மாணவியர் சன்மதி, வர்ஷினி, நித்யஸ்ரீ ஆகிய மூவரும் அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில், 5 மாணவர்கள், 480க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் பழனிச்சாமி, அறக்கட்டளை செயலாளர்கள்சித்ரலேகா, சரோஜாதேவி, முதல்வர் செல்வகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement