2 கோழி, 15 குஞ்சுகள் பலி போலீசில் விவசாயி புகார்


தளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஜவளகிரி அருகே சென்னமாளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி, 26. விவசாயி; இவருக்கு சொந்தமான, 2 மாடுகள் சண்டையிட்டு கொண்டதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் அப்பகுதியில் உள்ள பொதுக்குழாய் சேதமானது. இதை பற்றி அப்பகுதியை சேர்ந்த சந்திரப்பா என்பவர் கேள்வி எழுப்பியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 18 மதியம், 3:30 மணிக்கு, வெங்கடசாமி வளர்த்து வந்த, 2 கோழிகள் மற்றும் 15 குஞ்சுகள் இறந்தன.

விஷம் வைத்து கோழிகள் மற்றம் குஞ்சுகளை மர்ம நபர்கள் கொன்றதை அறிந்த வெங்கடசாமி, நேற்று முன்தினம் தளி போலீசில் புகார் செய்தார். அதில், ராஜப்பா மற்றும் அவரது தம்பி சந்திரப்பா ஆகியோர், தன் கோழிக்கு விஷம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக போலீசில் வெங்கடசாமி தெரிவித்தார். அதன்படி, தளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement