கன அடியாக நீர்வரத்து அதிக வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

கிருஷ்ணகிரி, பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து, 21வது ஆண்டாக, 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர். அவர்களுக்கு பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார்.


பள்ளி முதல்வர் மெரினா பலராமன், துணை முதல்வர் ஜலஜாக்சி, தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளி நிறுவனர் தம்பிதுரை எம்.பி., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில், 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்த மாணவி ஓவியா, 497 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்த கிருத்திகா, பிரதிஷ்கா, ஞானஸ்ரீ, 496 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பிடித்த காவியா, கோகிலா, சூர்யா, விகாசினி, ஜீவிதா ஆகியோருக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
இதேபோல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு, 590 மதிப்பெண்கள் பெற்ற அபியபீன்அலெக்ஸ், 589 மதிப்பெண்கள் பெற்ற ஜோதிகா, 588 மதிப்பெண்கள் பெற்ற நிக்ஷிதாவுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஜெயபால், தங்கமுத்து, வெற்றிச்செல்வன், துாயமணி மற்றும் பள்ளி பொறுப்பாளர் யுவராஜ், வேளாங்கண்ணி பள்ளி குழுமங்களின் முதல்வர்கள் ராஜேந்திரன், அன்பழகன், விவேக், பூங்காவனம், டேனிஷ்ஜோசப், வினோத், ஹாசாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement