வேகவதி பாலத்தில் மீண்டும் ஓட்டை முழுமையாக சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் சித்திவிநாயகர் பூந்தோட்டத்தில் இருந்து-, தும்பவனம் பகுதிக்கு இடையே செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் தினமும்ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், 2022ம் ஆண்டு டிசம்பரில், வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, பாலத்தின் ஒரு பகுதியில், ஓட்டை ஏற்பட்டது.

மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பாலத்தின் மீது, இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பள்ளத்திற்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கினர்.

இதையடுத்து, பாலத்தில் ஓட்டை ஏற்பட்ட பகுதி, மழை நின்றபின், 2023ம் ஆண்டு, ஜனவரியில் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், சீரமைக்கப்பட்ட பாலத்தில் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஓட்டையின் அளவு அதிகரித்து, பாலம் சேதமடையும் சூழல் உள்ளது.

எனவே, பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement