தீயணைப்பு துறை பாதுகாப்பு ஒத்திகை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில், தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால், தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா உத்தரவின் படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கையும், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி நிலைய அலுவலர் பொறுப்பு பிரகாசம் தலைமையில், தீயணைப்பு துறையினர் நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இதில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, தண்ணீரில் தத்தளிப்பவர்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்பது, அவர்களை கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, நீரில் மூழ்கியவர்களை, படகை பயன்படுத்தியும், டியூப் அணிந்து சென்று தேடுவது போன்றும், தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
மேலும்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
-
மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்
-
குருகுலம் பள்ளி சாதனை