அரூரில் ஜமாபந்தி துவக்கம்

அரூர், அரூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி துவங்கியது. தர்மபுரி கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். இதில், அரூர் வருவாய் உள் வட்டத்திற்கு உட்பட்ட, கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, வருவாய் சான்று, முதல் பட்டதாரி சான்று, புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் என, மொத்தம், 411 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சதீஸிடம் அளித்தனர். முன்னதாக, ஜமாபந்தியில் வி.ஏ.ஓ.,க்கள் பராமரித்து வரும் பதிவடுகள், வருவாய்த்துறையின் ஆவணங்கள் மற்றும் அலுவலகத்திலுள்ள நில அளவை கருவிகளை கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார். அரூர் தாசில்தார் பெருமாள், ஆர்.ஐ., சத்தியப்பிரியா உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் துணை தாசில்தார்கள் ஞானபாரதி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement