தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

1


சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ஆற்காட்டில் 145.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா, தமிழகத்தின் வடமாவட்டங்கள் இடையே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 26ம் தேதி வரை தொடரலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

ஆற்காடு 145.2


அரக்கோணம் 123

பாலாறு அணைக்கட்டு 98.4

திருத்தணி 96

ராணிப்பேட்டை 82.6


ரெட் ஹில்ஸ் 77


வாலாஜா 66.7



கலவை 63.8

விம்கோ நகர் 63



சோழவரம் 63


சோளிங்கர் 58.2



மணலி 56.1



செம்மேடு 53.4



மணலி புதுநகர் 52.8


ஆர்கே பேட்டை 51

எண்ணூர் 49.8

புழல் 48

சூரப்பட்டு 48



விழுப்புரம் 46.8



திருவொற்றியூர் 46.2



கோமுகி அணை 45



கலயநல்லூர் 44


பூண்டி 40

கள்ளக்குறிச்சி 40

Advertisement