திருப்போரூர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்போரூர்:திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதேபோல், செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.

ஊரணி பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

வட்டமண்டபத்தை சுற்றி அமர்ந்து, பக்தர்கள் விளக்கேற்றி கூட்டு வழிபாடு செய்தனர்.

Advertisement