மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி

திருப்பூர்:கேரள மாநிலம், மூணாறை சேர்ந்தவர் ராஜா, 46. இவரது மனைவி ஜானகி, 40. தம்பதிக்கு ஹேமா நேத்ரா, 15, மவுனா ஷெரின், 11, என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜானகி, ஈரோடு மாவட்டம், அரச்சலுாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். ராஜா கேரளாவில், கேபிள் ஆப்பரேட்டராக இருந்தார். குடும்பத்துடன் அரச்சலுாரில் வசித்தனர்.
இரு வாரம் முன் கேரளா சென்ற குடும்பத்தினர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து காரில் அரச்சலுார் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம், நத்தக்காடையூர் அருகே சென்றபோது திடீரென கார், சாலையோர புளியமரத்தில் மோதியது.
இதில், ராஜா, ஜானகி மற்றும் ஹேமா நேத்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் போராடிய மவுனா ஷெரினை அருகிலிருந்தோர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
-
மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்
-
குருகுலம் பள்ளி சாதனை