'மைனர்' காதல் ஜோடி ராமேஸ்வரத்தில் மீட்பு

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமான நிலையில், ஒரு சிறுமி, சிறுவன் நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வலர்கள், இருவரிடமும் விசாரித்தனர்.

இதில், அவர்கள் ஊட்டியை சேர்ந்தவர்கள் எனவும், சிறுவன் பிளஸ் 2 மாணவர், சிறுமி பத்தாம் வகுப்பு மாணவி எனவும் தெரியவந்தது. இருவரும் காதலித்ததை பெற்றோர் கண்டித்ததால், திருமணம் செய்து கொள்ளலாம் என, ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர்.

பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இருவரையும் ஊட்டி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்தனர். பின், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement