ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கட்டண சலுகை வழங்கல்

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாக சேர்மன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் மகுடமுடி கூறியதாவது:
ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.காம்., - பி.பி.ஏ., - பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., நுண்ணுயிரியல், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பி.சி.ஏ., மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன.
அதேபோல், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளன.
கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களும் கல்லுாரி படிப்பில் சேர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு முதல் பருவ கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.
அதிலும், குடும்பத்தில் முதல் முறையாக கல்லுாரியில் சேர்பவராக இருந்தால் முதல் பருவ கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்படும்.
முதுகலையில் சேர்பவர்களுக்கும் கட்டண சலுகை உள்ளது. மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சேர்மன் மகுடமுடி கூறினார்.
மேலும்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
-
மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்
-
குருகுலம் பள்ளி சாதனை