போதையில் காரை ஓட்டி பைக்குகளை சேதப்படுத்திய சென்னை டிரைவர் கைது: ஓட்டுனர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை
புதுச்சேரி: புதுச்சேரியில் மது போதையில் காரை ஓட்டிச்சென்று சாலையோரம் நிறுத்தியிருந்து பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுச்சேரி போக்குரவத்து சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி செய்திக்குறிப்பு: சென்னை, சூளைமேடு, கிருஷணாபுரம் தெருவைச் சேர்ந்த இஸ்ரேல் செல்வராஜ் மகன் லெவிஸ் ஜெரோம் சைரஸ், 23; டிரைவர். இவர், மது போதையில் கடந்த 18ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், புதுச்சேரி, இ.சி.ஆர்., லாஸ்பெட், எம்.ஜி.ஆர்., ரெசிடென்சிக்கு எதிரே, ஓட்டிச் சென்ற பி.எம்.டபள்யூ., கார் (டி.என். 07-டி.பி.-5689) மோதி சாலையோரம் நிறுத்தியிருந்த 8 பைக்குகள் சேதமாகின.
இது குறித்து புதுச்சேரி வீட்டு வசதி வாரியம், ஜவஹர் நகரை சேர்ந்த கிறிஸ்டியன்,32; புகாரின் பேரில் புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையம் (வடக்கு) போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். காரின் டிரைவர் லெவிஸ் ஜெரோம் சைரஸின் ரத்த மாதிரிகள் புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன.
மேலும் ஆல்கஹால் கருவி மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் மூச்சி காற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 127.5 மிகி/100 மிலி அளவைக் கொண்டிருந்தது. இதனையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்ய சென்னை, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
-
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை திடீர் ரத்து
-
கொலை குற்றவாளியல்ல: மோசடி செய்து ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கருக்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் பசவராஜ் சுட்டுக்கொலை: பலத்த அடி கொடுத்தது பாதுகாப்பு படை!
-
இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி இதுதான்; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு