முன்விரோதத்தில் இளைஞர் கொலை

மதுரை: மதுரை செல்லுாரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் 23. மாட்டுத்தாவணி பழமார்க்கெட் கடை ஒன்றில் வேலை செய்தார். நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செல்லுார் நிரஞ்சன் 21, உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூறியதாவது: நிரஞ்சனின் சகோதரர் திருட்டு வழக்கில் சிறை சென்றார். இதற்கு தங்கப்பாண்டியனின் நண்பர்தான் காரணம் எனக்கருதி நேற்றுமுன்தினம் அவரை தேடி வந்தனர். அவர் இல்லாததால் தங்கப்பாண்டியனை கொலை செய்தனர். நிரஞ்சனும், தங்கப்பாண்டியனும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் காதல் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுவும் கொலைக்கு ஒரு காரணம். தங்கப்பாண்டியன் மீது 4 வழக்குகளும், நிரஞ்சன் மீது ஆட்டோ கண்ணாடியை உடைத்த வழக்கும் நிலுவையில் உள்ளன.

Advertisement