தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு 

புதுச்சேரி : கோரிமேடு போலீஸ் நிலையத்தில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, ஆத்தங்கரை வீதியை சேர்ந்த ராஜ்குமார், 24; என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், ஜாமினில் வெளி வந்த ராஜ்குமார், அதன் பின் அந்த வழக்கு தொடர்பாக இதுவரையில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளார்.

மேற்படி வழக்கு தொடர்பாக பதிலளிக்க வரும் ஜூன் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு ராஜ்குமார் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னால் ஆஜராக வேண்டும் என, புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement