தேனி உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து இரு பெண்கள் காயம்

தேனி: தேனி உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வியாபாரி பொம்மையகவுண்டன்பட்டி மயில்தாய் 65, தற்காலிக பணியாளர் அல்லிநகரம் வெங்கலாநகர் தனலட்சுமி 45 ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
தேனி உழவர் சந்தை தாலுகா அலுவலகம் அருகே செயல்படுகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை செயல்படுகிறது. நேற்று மதியம் 12:00 மணியளவில் மேற்கு நுழைவாயில் ே சுற்றுசுவர் அருகே தற்காலிக பணியாளர் தனலட்சுமி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மூடைகளை மயில்தாய் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மயில்தாய், தனலட்சுமி காயமடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர்.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'நான்கு நாட்களுக்கு முன் சுற்றுச்சுவர் சாய்ந்த நிலையில் இருந்தது. துறை உயர் அலுவலர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்திருந்தோம். பொதுமக்கள் ,வியாபாரிகள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வந்தோம்,' என்றனர்.
மேலும்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!
-
தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் விபரீதம்; பாக்டீரியா பாதிப்பால் கேரளா இளைஞர் உயிருக்கு ஆபத்து
-
ஒரே நாளில் எகிறிய தங்கம் விலையால் பெண்கள் அதிர்ச்சி; சவரனுக்கு ரூ.1760 உயர்வு
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு