மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மேலபட்டியில் மின் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை துணை மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக இருந்த அண்ணா நகரை சேர்ந்த சரவணன் 28, சரி செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சரவணன் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இறந்த சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement