கோல்கட்டாவில் ட்ரோன் பறந்ததா போலீசார் விசாரணை

கோல்கட்டா: கோல்கட்டாவில் ட்ரோன் போன்ற பொருட்கள் பறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் ஹஸ்டிங்ஸ் போலீஸ் ஸ்டேசன் பகுதியில் ட்ரோன் போன்ற பொருட்கள் பறந்ததாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். இதனை போலீசாரும் பார்த்து உள்ளனர்.
தெற்கு 24 பராகன்ஸ் மாவட்டத்தின் மகேஷ்தாலா, ஹூக்ளி பாலம், ராணுவத்தின் கிழக்கு பிராந்தியம் தலைமையகமான வில்லியம் கோட்டை, பார்க் சர்க்கஸ் போன்ற பகுதிகளிலும் ட்ரோன்கள் தென்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோல்கட்டா போலீசின் புலனாய்வு துறையினர் மற்றும் சிறப்பு விசாரணை படையினர் விசாரித்து வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோல்கட்டாவில் ட்ரோன் பறந்ததாக தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடக்கிறது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முயற்சி நடந்து வருகிறது. கூடுதல் தகவல் கிடைத்ததும் அவை பகிரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தியா நிலைகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்கியது. தற்போது கிழக்கு எல்லையில் ட்ரோன்கள் பறந்ததாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
பட்டா வழங்குவதில் தொடரும் குளறுபடி விண்ணப்பதாரர்கள் அலைக்கழிப்பு
-
விருப்ப ஓய்வு கிடைக்காததால் அஞ்சல ஊழியர் தற்கொலை
-
பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது
-
மூன்று முறை போனை அசைத்தால் போலீசார் 'பறந்து' வந்து உதவுவார்கள் முதியோருக்கு போலீஸ் கமிஷனர் தைரியம்
-
சாலை வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
-
2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் அனகாபுத்துாரில் பெண்கள் எதிர்ப்பு