ஜமாபந்தியில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட கலெக்டர்

முதுகுளத்தூர் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆவணங்கள் சரியாக இல்லை எனக் கூறி அதிகாரிகளை கண்டித்துள்ளார்.

முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராமங்களுக்கு 1434ம் பசலி ஆண்டுகளுக்கான ஜமாபந்தி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. தாசில்தார் கோகுல்நாத் அனைவரையும் வரவேற்றார்.

முதுகுளத்துார் வடக்கு உள் வட்டத்திற்குட்பட்ட மேலமுதுகுளத்துார், கீழமுதுகுளத்துார், புல்வாய்க்குளம், நல்லுார், கீரனுார், மணலுார் கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினார்.

பின்பு சம்மந்தப்பட்ட பகுதியினுடைய கிராம கணக்குகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்கள் முறையாக இல்லை என கூறி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தார்.

இனிவரும் நாட்களில் முறையாக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடன் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement