வி.ஏ.ஓ., காலிப்பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி : புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிட எழுத்துத் தேர்வுக்கு நாளை (22ம் தேதி ) முதல் விண்ணபிக்கலாம்.

இது குறித்து புதுச்சேரி அரசு சிறப்பு செயலர் (வருவாய்) குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள வி.ஏ.ஒ., கலிப்பணியிடங்களை எழுத்துத்து தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.

இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் நிலையில் 41 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான எழுத்து தேர்வுக்கு விண்ணபிக்கும் முறை, தேர்வு முறை போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான காலியிடங்களின் பிரிவினை உள்ளடக்கிய விரிவான அறிவிப்பு நாளை (22ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் டி.ஆர் மற்றும் ஏ.ஆர்., (DR&AR) ஆட்சேர்ப்பு போார்ட்டலான https://recruitment.py.gov.inல் காணலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 21.06.25 பிற்பகல் 3:00 மணியாகும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement