கார்கள் மோதிய விபத்தில் வியாபாரி பலி

--பெரியகுளம் : தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த நூல் வியாபாரி நாகேந்திரன் 48. திண்டுக்கல்லிருந்து தேனி நோக்கி காரை ஓட்டிச் சென்றார். பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி -சருத்துப்பட்டி பைபாஸ் ரோடு விலக்கு அருகே வந்த போது கேரளாவிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இதில் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் சிக்கிய நாகேந்திரனை பெரியகுளம் தீயணைப்பு துறையினர் காரை உடைத்து உடலை மீட்டனர்.

எதிரே மோதிய காரில் சென்ற டிரைவர் நிகில் 25. அவரது நண்பர் விஷ்ணு 24, ஆகியோர் காயம் ஏற்பட்டது. நாகேந்திரன் உடல் மற்றும் காயம்பட்டவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தென்கரை போலீசார் நிகிலிடம் விசாரிக்கின்றனர்.-

Advertisement