தோட்டக்கலைதுறை மானிய திட்ட பயனாளிகள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி : புதுச்சேரி தோட்டக்கலைத்துறை திட்டத்தில் 100 சதவீதம் மானியம் பெறும் பயனாளிகள் பட்டியலில் ஆட்சேபனை இருந்த தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகம் மூலம் 2024-25ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தோட்டக்கலை திட்டத்தின் 'என் வீடு என் நலம்' உட்கூறின் கீழ் தோட்டக்கலை தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் பெறக்கோரி விண்ணப்பித்திருந்த குழுக்களின் உறுப்பினர், பயனாளிகளின் விவரங்கள் கடந்த 19ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை சமுதாய தணிக்கைக்காக புதுச்சேரியில் உள்ள சம்மந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் பயனாளிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் ஆட்சேபனை இருப்பின் வரும் 28ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement