ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

புதுடில்லி:'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தீவிர விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள ஒரு முன்மொழிவாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதை வலியுறுத்துவதாகும்.
இந்நிலையில் இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுடன் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:
அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நிர்வாகத்திற்கு இடையூறாகவும், பொதுச் செலவினங்களை உயர்த்துவதாகவும் இருக்கிறது. ஆகவே
"ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மேலும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடிக்கடி தேர்தல்கள் நடப்பது அரசியல் தலைமை மற்றும் நிர்வாக இயந்திரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாகவும், நீண்டகால கொள்கை முடிவுகளுக்கு இடமளிக்க மறுக்கின்றனர்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
மேலும்
-
பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி மும்முரம்
-
அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
-
கொளந்தானுாரில் கழிப்பிடத்தை திறக்க மக்கள் எதிர்பார்ப்பு
-
பொன்னேரி - பழவேற்காடு சாலையில் வளைவுகளை விரிவுபடுத்த கோரிக்கை
-
கரூரில் சுற்றித்திரிந்த மூதாட்டியை சொந்த ஊருக்கு அனுப்பிய போலீசார்
-
சாயும் நிலையில் மின் கம்பம் மாற்ற மக்கள் வேண்டுகோள்