இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி இதுதான்; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு

பனாஜி: பயங்கரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது என்பதுதான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா உலகுக்கு அளித்த செய்தி என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
தெற்கு கோவாவின் வாஸ்கோவில் மோர்முகாவ் துறைமுக ஆணையத்தால்(எம்.பி.ஏ.,) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் ஜக்தீப் தன்கர் பங்கேற்று பேசினார்.இந்த நிகழ்வில்,கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைகளுக்கான மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் துல்லியமான ராணுவத் தாக்குதல்கள், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு சரியான செய்தியைக் கொடுத்தன.
இது உலகளாவிய செய்தியை அனுப்பியுள்ளது. பயங்கரவாதம் இனி தண்டிக்கப்படாமல் இருக்காது என்று பீகாரிலிருந்து பிரதமர் மோடி முழு உலகிற்கும் வழங்கிய செய்தி. இது பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை முன்மாதிரியானது.
பயங்கரவாதிகளை இலக்காக மட்டுமே கருதி, நமது நெறிமுறைகளை மனதில் கொண்டு, சர்வதேச எல்லைக்கு அப்பால் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் ஒரு திருப்தி.
இந்த நடவடிக்கையால் அடையப்பட்ட வெற்றி குறித்து, யாரும் அதற்கான ஆதாரத்தைக் கேட்கவில்லை. இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், கடல்சார் சக்தியாகவும் வளர்ந்து வருகிறது. நாடு அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.
மேலும்
-
டில்லியை தாக்கிய புழுதிப்புயல்; நடுவானில் 227 பேருடன் சென்ற விமானம் சேதம்
-
சிந்து, மாளவிகா தோல்வி: மலேசிய பாட்மின்டனில்
-
இந்திய ஜோடி ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
-
இந்திய அணி அறிவிப்பு எப்போது: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு
-
தொழில்முறை குத்துச்சண்டை: சிம்ரன்ஜித் கவுர் பங்கேற்பு
-
பாகிஸ்தானில் திருமணம் செய்ய விரும்பிய பெண் யுடியூபர் ஜோதி!