இந்திய அணி அறிவிப்பு எப்போது: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு

புதுடில்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மே 24ல் அறிவிக்கப்பட உள்ளது.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31-ஆக. 4) நடக்கவுள்ளன.
இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு, மே 24ல் மும்பையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தலைமை பயிற்சியாளர் காம்பிர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனும் அறிவிக்கப்பட உள்ளார். சுப்மன் கில், ரிஷாப் பன்ட், பும்ரா என மூவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். இதில் சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி காயத்தால் பாதிக்கப்படுவதால் பும்ராவுக்கு வாய்ப்பு குறைவு. ஒருவேளை விக்கெட் கீப்பரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்தால், ரிஷாப் பன்ட் தேர்வாகலாம். இந்த அணியில், நிறைய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும்
-
இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள்
-
முதல்வரின் உறவினர் ஆகாஷ் தலைமறைவு; தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்
-
சிகிச்சை அளிக்காததே மூவர் உயிரிழப்புக்கு காரணம்; சீமான்
-
தள்ளாடும் 'இ - சேவை' மையங்கள்; 'சர்வர்' பிரச்னையால் தினமும் அவதி
-
காரியம் சாதிக்க தவழ்ந்து சென்றது யாரு?
-
மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர்?