டில்லியை தாக்கிய புழுதிப்புயல்; நடுவானில் 227 பேருடன் சென்ற விமானம் சேதம்

2


டில்லி: டில்லியை கடுமையாக தாக்கிய புழுதிப்புயல் காரணமாக நடுவானில் 227 பேருடன் சென்ற இண்டிகோ விமானம் சேதமடைந்தது. விமானியின் சாமர்த்தியத்தால், 227 பயணிகள் உயிர்தப்பினர்.

தலைநகர் டில்லி இன்று மாலை முதல் நொய்டா , காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. அதோடு, பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. காற்றின் வேகம் மணிக்கு 79 கி.மீ., வேகத்தில் வீசியது. யமுனா விஹார், பஜன்புரா மற்றும் கோஹல்புரி பகுதியில் உள்ள மக்கள் இந்தப் புழுதிப்புயலால் பெரிதும் பாதித்தனர்.

ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புழுதிப்புயல் காரணமாக விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெய்த ஆலங்கட்டி மழையால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிரக்கப்பட்டது.

Advertisement