தொழில்முறை குத்துச்சண்டை: சிம்ரன்ஜித் கவுர் பங்கேற்பு

புதுடில்லி: இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர், தொழில்முறை குத்துச்சண்டையில் பங்கேற்க உள்ளார்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 29. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், உலக சாம்பியன்ஷிப் (2018, வெண்கலம்), ஆசிய சாம்பியன்ஷிப் (2019ல் வெள்ளி, 2021ல் வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய இவர், கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் 65 கிலோ பிரிவில் 2வது இடம் பிடித்திருந்தார்.


தற்போது சிம்ரன்ஜித் கவுர், முன்னாள் அமெரிக்க வீரர் ராய் ஜோன்ஸ் ஜூனியர், இந்தியாவின் மன்தீப் ஜாங்ராவுடன் இணைந்து தொழில்முறை போட்டியில் பங்கேற்க உள்ளார். நடப்பு ஆண்டில் தொழில்முறை போட்டிக்கு திரும்பிய 3வது இந்தியரானார் சிம்ரன்ஜித். சமீபத்தில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், அமித் பங்கல், தொழில்முறை போட்டிக்கு ஒப்பந்தமாகினர். ஏற்கனவே இந்தியாவின் விஜேந்தர் சிங், விகாஸ் கிருஷ்ணன், சரிதா தேவி, நீரஜ் கோயத், தொழில்முறை போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இதுகுறித்து சிம்ரன்ஜித் கவுர் கூறுகையில், ''தொழில்முறை போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவுக்கு பெருமை தேடித்தர முயற்சிப்பேன்,'' என்றார்.

Advertisement