தும்மங்குட்டை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை



எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி பஞ்.,ல் எட்டு ஏக்கர் பரப்பளவில் தும்மங்குட்டை உள்ளது. இந்த குட்டையில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி, 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கொல்லிமலையில் மழை பெய்யும்போது, மலையில் இருந்து வரும் தண்ணீர் அடிவாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்பி, பின் வெளியேறும் தண்ணீர் பூங்காற்றின் வழியாக பெட்டிரெட்டிப்பட்டியில் உள்ள தும்மங்குட்டைக்கு செல்லும்.

இந்த தண்ணீர் பாய்ந்தோடும் ஆறு, விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ளதால், ஆற்றில் தண்ணீர் வரும்போது இப்பகுதி விவசாயிகள் ஆற்றை கடக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல, ஆற்றில் இறங்கி செல்லும் நிலை உள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்லாத நிலையில், மழைக்காலம் துவங்கும் முன் இந்த தும்மங்குட்டை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement