சாயும் நிலையில் மின் கம்பம் மாற்ற மக்கள் வேண்டுகோள்
கரூர், கரூர், ஆத்துார் பிரிவு சாலையில் மின் கம்பம் சாயும் நிலையில் உள்ளதை மாற்ற வேண்டும்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ், ஆத்துார் பிரிவு சாலையில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளன. ஒரு மின் கம்பம் கீழே போதிய பிடிமாணம் இல்லாமல் மெல்ல, மெல்ல சாய்ந்து வருகிறது. இப்படியே விட்டுவிட்டால், மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல மின் கம்பங்களில், செடி, கொடிகள், வளர்ந்து கிடக்கின்றன.
மின் கம்பங்கள் இருப்பதே தெரியாத அளவில், செடி, கொடிகள் சூழ்ந்துள்ளன. செடிகள் மூலம் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பு உள்ளதால், அதன் அருகில் செல்பவர்கள் மின்சாரத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக சாயந்த மின் கம்பத்தை மாற்றவும், மின் கம்பங்களில் படர்ந்த செடி, கொடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும்
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
இன்றைய மின்தடை