அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்

1


புதுடில்லி: ''அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது'' என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால், நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.


தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


'மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும், 27ம் தேதி காற்றழுத்த தழ்வு பகுதி உருவாகக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement