தேசிய தடய அறிவியல் பல்கலைக்கு 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில், காவலர் உயர் பயிற்சியகம் அருகே, 35 ஏக்கரில், தேசிய தடய அறிவியல் பல்கலை அமைய உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், டில்லி, குஜராத், மணிப்பூர், திரிபுரா என, எட்டு மாநிலங்களில், தேசிய தடய அறிவியல் பல்கலை செயல்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆகிய இடங்களில், இந்த ஆண்டு, தேசிய தடய அறிவியல் பல்கலை துவக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் செயல்படும், காவலர் உயர் பயிற்சியகம் அருகே, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கு, தமிழக அரசு, 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து தேசிய தடய அறிவியல் பல்கலை நிர்வாகிகள் கூறுகையில்,' தற்காலிகமாக, சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில், டாக்டர் எம்.ஜி.ஆர்., ேஹாட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி கல்லுாரியில், தேசிய தடய அறிவியல் பல்கலை துவக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மூன்று முதுகலை படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கிய நிலத்தில், விரைவில் கட்டுமானப் பணி துவக்கப்படும்' என்றனர்.
மேலும்
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!