பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

9

புதுடில்லி: ''பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



நெதர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றன. பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வலுவான உறவு



பாகிஸ்தான் அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக நெதர்லாந்து உள்ளது. இந்தியா, நெதர்லாந்து ஆகிய இருநாடுகளுக்கு இடையே வலுவான உறவுகள் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

பாசாங்கு



பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் சம்பந்தப்படவில்லை என்று பாசாங்கு செய்ய வேண்டாம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச குற்றமாகும், அதை மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ கூடாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

Advertisement