முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் பஸ் நிலையத்தில், முத்தரையர் 150வது சதய விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த சதய விழாவில், அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து முத்தரையர் சங்கங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



அ.தி.மு.க., தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சி.வி.சேகர், மாநில அமைப்பு செயலாளர் துரை, செந்தில், மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி, நகர செயலாளர் ஆனந்த், தி.மு.க., மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆலத்தூர் கார்த்திக், மதுக்கூர் சதீஷ், முன்னாள் வர்த்தக செயலாளர் ரமேஷ், சிரமேல்குடி ராஜேந்திரன், பட்டுக்கோட்டை பூபதி,


அரவிந்த் அம்பலக்காரர், மதுக்கூர் கார்த்திக், சொக்கனாவூர் யோகராஜ், விக்கிரமம் முருகேஷ், இளங்காடு அருண் நெம்மேலி நடராஜன், துவரங்குறிச்சி விசுவலிங்கம்,நடராஜன், தனபால், சிராங்குடி சதீஷ்குமார், நெம்மேலி பொன்னுச்சாமி, கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement