ஆற்றலை பெருக்கும் சூரிய நமஸ்காரம் உடலை நீட்டி, சீராக சுவாசிக்கும் பயிற்சி

ஆற்றலை பெருக்கும் சூரிய நமஸ்காரத்தில் உள்ள 10 நிலை ஆசனங்களில், கடந்த வாரம்சதுர்தண்ட ஆசனம் (நான்காம் நிலை), கோகிலாசனம் (ஐந்தாம் நிலை), மேரு ஆசனம் (ஆறாம் நிலை)ஆசனங்களின் செயல்முறைகளைபார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம்பாதஹஸ்த ஆசனத்தின் மாறுபட்ட நிலை, பாதஹஸ்த ஆசனம், அஞ்சலி முத்திரை, சமஸ்தி ஆசனபயிற்சி செய்வோம்.

ஏழாம் நிலை (அ) பாதஹஸ்த ஆசனத்தின் மாறுபட்ட நிலை



மூச்சை இழுத்துக் கொண்டே முன்னே குதித்து, தலையை துாக்கி, பாதஹஸ்த ஆசனத்தின் மாறுபட்ட நிலைக்கு வரவும்.

எட்டாம் நிலை (அ) பாதஹஸ்த ஆசனம்



சுவாசத்தை வெளியிட்டு, முட்டியை தலை தொடும் நிலை. அதாவது பாத ஹஸ்த ஆசன நிலைக்கு வரவும்.

ஒன்பதாம் நிலை (அ) அஞ்சலி முத்திரை



சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே நிமிர்ந்து நின்று கைகளை பக்கவாட்டில் இருந்து வட்டமாக துாக்கி, வான்நோக்கி ஒன்று சேர்த்து, தலையை துாக்கி கைகளைப் பார்க்கவும். இதுவே அஞ்சலி முத்திரை.

பத்தாம் நிலை (அ) சமஸ்தி ஆசனம்



சுவாசத்தை வெளியிட்டு கைகளை பக்கவாட்டில் வைக்கவும். உள்ளங்கை சூரியனை நோக்கிய வண்ணம் நிற்கவும். இந்த நிலையில் ஆழ்ந்து சுவாசித்து ஓய்வெடுக்கவும்.

இந்த பத்து நிலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செய்வது ஒரு சுற்றாகும். போதுமான அளவிற்கு ஓய்வெடுத்தபின் இந்த வரிசை முழுவதையும் திரும்பவும் செய்ய வேண்டும்.

உடலை மேல்நோக்கிக் கொண்டு செல்லும்பொழுது நீண்டு சுவாசத்தை உட்கொண்டு, உடலை கீழிறக்கும் பொழுது சுவாசத்தை வெளியிட வேண்டும். இதில் மிக முக்கிய அம்சமானது, உணர்வுடன் முடிந்த அளவு உடலை நீட்டி, அதனுடன் நீண்டு சீராக சுவாசிப்பதாகும்.

இந்த வரிசை முழுவதையும் 6 முறை திரும்ப செய்ய வேண்டும். பயிற்சியை முதன்முறையாக செய்பவர்கள் ஒரு சுற்றுக்கும் அடுத்த சுற்றுக்கும் இடையே சற்று ஓய்வெடுக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள் தொடர்ச்சியாக 6 சுற்றுகள் செய்யலாம்.

அடுத்த வாரம் சமநிலை (சமஸ்திதி) ஆசனங்கள் குறித்து பார்ப்போம்....

Advertisement