சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நக்சல் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ' ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட்' என்ற பெயரில், மத்திய மாநில அரசுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் கேசவ ராவ் எனப்படும் பசவராஜூ உள்ளிட்ட 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
''பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இடைவிடாத துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது'' என சுக்மா மாவட்ட போலீசார் தெரிவித்தனர்
மேலும்
-
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி
-
பேச மறுத்த காதலியை வெட்டிக் கொன்ற காதலன்: தானும் தூக்கிட்டு தற்கொலை
-
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு
-
கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்
-
குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு: சோனியா, ராகுலை சந்தித்தது குறித்து முதல்வர் கருத்து