செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாமி வீதியுலா

புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பிரமோற்சவ விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

வில்லியனுார் அடுத்த குருவப்பநாயக்கன்பாளையம், செல்லமுத்து மாரியம்மன் கோவில் 18 ம் ஆண்டு பிரமோற்சவம், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.

நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. இரவு செல்லமுத்து மாரியம்மன், பிரத்தியங்கராதேவி, வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 27ம் தேதி செடல் உற்சவம், 28 ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழா குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement