திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்

திருப்பதி; திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் 5 கி.மீ., பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.



கோடை விடுமுறை எதிரொலி, வார இறுதி நாட்கள் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பக்தர்கள் தங்கும் அறைகள் நிரம்பி வழிகின்றன.


கிருஷ்ணதேஜா வட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 5 கி.மீ., தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 24 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்கின்றனர். சிறப்பு தரிசனம் செய்யும் விரும்பும் பக்தர்களும் பல மணி நேரம் காத்திருந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனர்.


தங்கும் அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் விடுதி வளாகங்கள், மரத்தடிகளில் ஓய்வு எடுத்தனர். வார இறுதிநாள் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement