கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டிபுதுச்சேரி பல்கலை, பாரதிதாசன் கல்லுாரி சாம்பியன்

புதுச்சேரி: கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியும், ஆண்கள் பிரிவில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியும் சாம்பியன்ஷிப்பை வென்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி, கல்லூரிகளுக்கு இடையேயான முதல்வர் கபடி போட்டி நடந்தது.
இப்போட்டியில் பல்வேறு கல்லூரி அணிகள் ஆர்வமாக பங்கேற்றன.
பரிசளிப்பு விழா சமுதாய கல்லூரியில் நடந்தது. கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் வரவேற்றார். விளையாட்டு நிகழ்வுகளின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரி, கல்லுாரியின் விளையாட்டு சாதனைகளை பட்டியலிட்டார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பாணிதி பிரகாஷ் பாபு, கபடி போட்டியில் வெற்றிப்பெற்ற கல்லுாரி அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.
எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியும், ஆண்கள் பிரிவில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்