எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி சாதனை

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மண்ணரையில் உள்ள எஸ்.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளி மாணவி அனுஷ்கா, 484 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஜஸ்மிதா, 483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெனிதா, 477 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் மாணவி ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். 450 மதிப்பெண்ணுக்கு மேல் ஏழு மாணவர்களும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் எட்டு மாணவர்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மாணிக்கராஜ், செயலாளர் நிஷா, முதல்வர் கோபிநாத் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

Advertisement