மின்சாரம் தாக்கி மாணவி பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த நன்னாடு புது காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார்; சென்னை புளியந்தோப்பில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுசுயா, 14; அங்குள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு முடித்து, 10ம் வகுப்பு செல்ல இருந்தார். கோடை விடுமுறைக்காக, நன்னாட்டில் உள்ள பாட்டி மங்காத்தா வீட்டிற்கு, அனுசுயா வந்தார்.

நேற்று மாலை பாட்டி மங்காத்தா கூறியதால், அனுசுயா மின் மோட்டார் சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement