பெண் குழந்தை ஒப்படைப்பு 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி சண்முகா நதி அருகில் ஏப்.9ல் பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. இந்த குழந்தைக்கு பழநி அரசு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தையின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து அக்குழந்தை திண்டுக்கல்லில் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் தொட்டில் குழந்தைகள் திட்ட பிரிவினரிடம் மே 20ல் ஒப்படைக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் குழந்தைகளை பராமரித்து, அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் வாயிலாக குழந்தையை தத்தெடுக்க பதிவு செய்து காத்திருப்போருக்கு சட்டப்பூர்வ நடைமுறைக்கு பின் தத்துக் கொடுக்கப்படும்.

Advertisement