இன்டர்வியூக்காக பெண்களை அலையவிட்ட அதிகாரிகள்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியம் எல்.புதுார் திருமக்கம்பட்டி, துலுக்கம்பாறை, பொன்னம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கான 7 பணியிடங்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு நடந்தது. இதற்கு குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.

குஜிலியம் பாறையில் நேற்று தேர்வு நடந்த நிலையில் ஆர்.கோம்பை தாசமநாயக்கன்பட்டி கோகிலா, வாத்தியார் புதுார் மகாலட்சுமி உள்ளிட்டோருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி திண்டுக்கல் என்ற விலாசத்திற்கு வருமாறு இன்டர்வியூ கார்டு அனுப்பப்பட்டது.

இதனால் திண்டுக்கல் சென்ற கோகிலா உள்ளிட்டோர், எந்த பள்ளி என தெரியாத நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஏறி இறங்கினர்.

இதன் பிறகு குஜிலியம்பாறை ஊட்டச்சத்து அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது குஜிலியம் பாறையில் தான் இன்டர்வியூ நடக்கிறது .இங்கு வாருங்கள் என கூறி உள்ளனர்.

அதன் பிறகு குஜிலியம்பாறை சென்று தேர்வில் பங்கேற்றனர்.

ஆர்.கோம்பை கோகிலாவின் கணவர் தர்மர் கூறியதாவது:

குஜிலியம்பாறையில் நடக்கக்கூடிய இன்டர்வியூக்கு, திண்டுக்கல் என கார்டு வந்ததால் திண்டுக்கல் சென்று சுற்றி

அலைந்து மீண்டும் குஜிலியம்பாறை வந்து இன்டர்வியூவில் பங்கேற்றோம் என்றார்.

Advertisement