ரூ.2,000 லஞ்சம் பெற்ற வழக்கு: முன்னாள் சமூகநல அலுவலருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை

திருப்பூர்: ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் சமூக நலத் துறை ஊரக நல அலுவலருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்தவர் கமலீஸ்வரி. இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 2016ம் ஆண்டு, தனது மகளுக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற ஆன்லைன் மூலமாக விண்ணப் பித்திருந்தார். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்க, சமூகநலத்துறை ஊரக நல அலுவலர் ஆறுமுகத்தாய் ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத, கமலீஸ்வரி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கடந்த 2016ம் ஆண்டு ஆறுமுகத்தாய் ரூ.2,000 லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் ஆறுமுகத்தாய் மீது திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் இன்று (மே 22) ஆறுமுகத்தாய்க்கு ரூ.2,000 அபராதமும், 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி வெற்றி
-
அரசு பள்ளிகளில் துாய்மை பணி கோடை விடுமுறையில் தீவிரம்
-
பஸ் ஸ்டாண்டையும் கொஞ்சம் கவனியுங்க! அடிப்படை வசதிகள் இல்லை; கண்டு கொள்ளாத நகராட்சி
-
முதல்வரின் காலில் விழுவதற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தடை
-
பிரதமர் மோடிக்கு ராகுலின் 3 கேள்விகள்!
-
நக்சல் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்துவிட்டோம்: சத்தீஸ்கர் முதல்வர் பெருமிதம்