இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு: ஹர்மன்பிரீத் மீண்டும் கேப்டன்

புதுடில்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.

அடுத்து நெதர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாடுகிறது. அதன்பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர்கொள்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங் (துணை கேப்டன்), கிருஷ்ணன் பகதுார் பதக், சூரஜ் (கோல்கீப்பர்), சுமித், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங், நிலாம் சஞ்ஜீப், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், யாஷ்தீப் சிவாச், ராஜ் குமார் பால், நீலகண்ட சர்மா, ராஜிந்தர் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷாம்ஷெர் சிங், குர்ஜாந்த் சிங், அபிஷேக், ஷிலானந்த் லக்ரா, லலித் குமார், தில்பிரீத் சிங், சுக்ஜீத் சிங்.

Advertisement