கோப்பை வென்றது எமிரேட்ஸ்: வங்கதேசம் மீண்டும் தோல்வி

ஷார்ஜா: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய யு.ஏ.இ., அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்ற வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி ஷார்ஜாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் (14) ஏமாற்றினார். டான்ஜித் ஹசன் (40), ஜாகர் அலி (41), ஹசன் மஹ்மூத் (26*) ஓரளவு கைகொடுத்தனர். 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய யு.ஏ.இ., அணிக்கு கேப்டன் முகமது வாசீம் (9) சோபிக்கவில்லை. முகமது ஜோஹைப் (29) நம்பிக்கை தந்தார். ரிஷாத் ஹொசைன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அலிஷான் ஷராபு, 38 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ஹசன் மஹ்மூத் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.
யு.ஏ.இ., அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தவிர, வங்கதேசத்துக்கு எதிராக முதன்முறையாக 'டி-20' தொடரை வென்றது. ஷராபு (68), ஆசிப் கான் (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு ராகுலின் 3 கேள்விகள்!
-
நக்சல் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்துவிட்டோம்: சத்தீஸ்கர் முதல்வர் பெருமிதம்
-
ஆயுஷ் மாத்ரே, வைபவ் வாய்ப்பு: இந்திய ஜூனியர் அணியில்
-
துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 33 பேருக்கு வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு;விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பெருமிதம்!
-
இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: டக்கெட், கிராலே, போப் சதம்
-
கோவில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல; நினைவில் வைக்க வேண்டிய இடம்: கவர்னர்