டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை

சென்னை: ''சட்டவிரோத பார்கள், கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்தும் கிடைக்கும் பணம் தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவிற்கு சென்றடைகிறது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது பதிவு:
டாஸ்மாக் என்பது தமிழக அரசு நடத்தும் நிறுவனம். இது தமிழக மக்களை போதையில் இருப்பதையும், தங்கள் செலவில் தி.மு.க., லாபத்தை ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டு உள்ளது. ஏராளமான சட்டவிரோத பார்கள் மூலமும் கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வருகிறது. தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் பல ஆயிரம் கோடி சேர்கிறது.
டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு அதிகாரிகளின் கொடுமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறார். ஏழைகளை கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு, மக்களின் அரசாக செயல்படுவதற்கு முன்னர், ஸ்டாலின் அரசு இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கும். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.









மேலும்
-
போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் திறப்பு பட்டாபிராமபுரத்தில் 2 நாள் போராட்டம் வீண்
-
வக்கீலுக்கு கொலை மிரட்டல் 'மாஜி'யின் மகன் மீது வழக்கு
-
ஜமாபந்தியில் சிக்கிய போலி வி.ஏ.ஓ., கைது
-
சீருடையில் எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை
-
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்
-
கற்கள் பெயர்ந்த சாலையால் பெருமாள்பட்டில் அவதி